தேசிய மற்றும் ஊரக திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற கடலையூர் செங்குந்தர் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் தபால் தலை வெளியிடப்பட்டது.
தேசிய திறனாய்வுத் தேர்வில் கோவில்பட்டி அருகே கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மாணவர் தமிழ்ச்செல்வன், மாணவி செந்தமிழ்ச் செல்வி, ஊரக திறனாய்வுத் தேர்வில் மாணவிகள் ரம்யா, சிவப்பிரியா, செல்வலட்சுமி, நந்தினி, கோமதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களை கவுரவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் அச்சிட்ட தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்குப் பள்ளியின் செயலாளர் மா.மாரிமுத்து தலைமை வகித்து, மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் அச்சிட்ட தபால் தலைகளை வெளியிட்டார். இதில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சங்கரசுப்பு, தலைமை ஆசிரியர் விவேகானந்தன், ஆசிரியர்கள் திலகவல்லி, அய்யமுத்துராஜா, மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். தேசிய திறனாய்வுத் தேர்வு பொறுப்பாசிரியர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago