கரோனா பாதிப்புக்குப் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசர கால எண்களுடன் கூடிய மொபைல் போன்கள் வழங்கப்படும் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா 2-வது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அலையில் கோவிட் 19 தொற்றால் நடுத்தர வயதினர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
குடும்பத்தில் தாய், தந்தை என இருவருமே பலியான சம்பவங்களும் நடந்ன. இதனால், அவர்களின் குழந்தைகள் ஆதரவின்றித் தவித்தனர். இதனையடுத்து முதன்முதலாக மத்தியப் பிரதேச மாநில அரசு ''கரோனா பெருந்தொற்றில் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி வழங்கப்படும். அத்துடன் மாதாமாதம் ரூ.5,000 ஓய்வூதியமும் இலவச ரேஷனும் வழங்கப்படும்'' என்று தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றதை அடுத்துப் பல்வேறு மாநில அரசுகளும் கரோனாவால் பெற்றோர்களை/ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தன. மத்திய அரசும் இலவசக் கல்வி, நிதியுதவி உள்ளிட்டவற்றை அறிவித்தது.
» 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி
» விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஜூன் 21-ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்
இந்நிலையில் தெலங்கானாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்க மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் மாநில நலத்துறை அதிகாரி அக்கேஸ்வர் ராவ் கூறும்போது, ’’இத்தகைய மொபைல் போன்களில் அவசரகால எண்களைச் சேமித்துக் கொடுப்பதன் மூலம் ஒரே க்ளிக்கில் அவர்களுக்குத் தேவையான அதிகாரிகளிடம் பேசி, உதவியைப் பெற முடியும்.
தேவைப்படும் நேரத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும். தொடர்புடைய அதிகாரிகளுடன் எப்போது பேச வேண்டும் என்பது பற்றிக் குழந்தைகளுக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளோம்.
ஹைதராபாத்தில் மட்டும் 10 குழந்தைகள் கரோனா தொற்றுக்குத் தாய், தந்தை என இருவரையுமே இழந்துள்ளனர். பெருந்தொற்றுக் காலத்தில் பிற காரணங்களால் 75 பேர் பெற்றோரை இழந்துள்ளனர். இவை தவிர்த்து 138 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை (தாய்/ தந்தை) இழந்திருக்கின்றனர். அவர்கள் 200 பேருக்கும் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago