பள்ளி, கல்லூரி கல்விக் கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டும்: புதுச்சேரி முதல்வருக்கு எம்.பி. கடிதம்

By செ.ஞானபிரகாஷ்

பள்ளி, கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க உத்தரவிடுமாறு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு, எம்.பி. வைத்திலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார். அதேபோல் கடன்களுக்கான வட்டித் தொகைக்கு ஆறு மாதங்களுக்குத் தடை விதிக்கவும் மத்திய நிதி அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரியில் பல தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு கூறப்பட்டு வருகிறது. அத்துடன் கடந்த ஆண்டு கல்விக் கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் நடப்பாண்டு ஆன்லைன் வகுப்புகளில் கூடப் பங்கேற்க அனுமதிப்பதில்லை. கடும் சிக்கலில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் இன்று முதல்வர் ரங்கசாமிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தற்போதைய ஊரடங்கால் நிறையத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரத்திற்குப் போராடி வருகின்றனர். இவர்களைத்தவிர சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களும் வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆண்டுக் கட்டணத்தைச் செலுத்த வற்புறுத்தி வருகின்றன. உண்மையில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கட்டணம் கேட்பதைக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்.பி. வைத்திலிங்கம்

மத்திய அமைச்சருக்குக் கடிதம்

அதேபோல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி. வைத்திலிங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில், "புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்று இரண்டாம் அலையில் சிக்கி அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் செலுத்தவேண்டிய பல்வேறு கடன்களுக்கான தவணைத் தொகைக்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். கடன்களுக்கு வட்டி விதிக்கவும் 6 மாதம் தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த நிதியாண்டில் முதலாவது காலாண்டில் கட்டவேண்டிய முன்கூட்டிய வரியை இரண்டாவது காலாண்டு வரை ஒத்திவைக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

11 days ago

வெற்றிக் கொடி

11 days ago

வெற்றிக் கொடி

11 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்