ஜூலை மாதத்தில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படுவதாகவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கடந்த ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. நெருக்கடி காலத்தில் ஆன்லைனிலும் நேரடியாகவும் கல்வி போதிப்பதும், கற்பதும் பெரும் சவாலாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டும் கரோனா 2-வது அலை காரணமாகவும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றித் தேர்ச்சி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே நாட்டில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், குஜராத், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களும் பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன.
இந்நிலையில் ஜூலை மாதத்தில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படுவதாகவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
» பிளஸ் 2 தேர்வு ரத்தானால் தனியார் பள்ளிகளுக்கே லாபம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்
» டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வேலை?- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
இதுகுறித்துக் கர்நாடகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ''கரோனா தீவிரமடைந்ததை அடுத்து 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 11-ம் வகுப்புத் தேர்வில் அவர்களின் செயல்திறனைக் கணக்கில் கொண்டு மதிப்பீடு செய்யப்படுவர். எனினும் தங்களின் மதிப்பீட்டில் மகிழ்ச்சி அடையாத மாணவர்கள், சூழல் ஏற்படும்போது வைக்கப்படும் தேர்வை எழுதலாம்.
அரசு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த முடிவெடுத்துள்ளது. ஜூலை 3-வது வாரத்தில் தேர்வுகள் தொடங்கி நடைபெறும். கேள்விகள் எளிமையாகவும் நேரடியாகவும் இருக்கும். குழப்பும் வகையில் இருக்காது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வுகளும் பின்னர் நடத்தப்படும்'' என்று அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago