அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்த மற்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டத் தேர்வுகள், அரியர், இறுதித் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடங்கப்படும் என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, உயர்கல்வித் துறை இன்று (மே 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தலைமைச் செயலகத்தில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், பல்கலைக்கழகச் செயல்பாடுகள் குறித்து, காணொலி மூலம் கலந்துரையாடினார். இதில், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
» மே 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
» மே 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
* ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்வான / தேர்வாகாத மாணவர்கள், புதியதாக நடைபெறவிருக்கின்ற அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
* 2017 நெறிமுறையின்படி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புக்கான தேர்வுகள் 14.06.2021இல் தொடங்கும். மற்ற பல்கலைக்கழகங்களைப் போலவே, ஆன்லைன் மூலம் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும். 14.06.2021இல் தொடங்கி 14.07.2021க்குள் தேர்வுகள் முடிவடையும்.
* 2013 - 2017 நெறிமுறையின்படி பட்டப் படிப்புக்கான தேர்வுகள் 14.06.2021இல் தொடங்கப்படும். பட்ட மேற்படிப்புக்கான தேர்வுகள் 14.07.2021இல் தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறும்.
* 2013-க்கு முன் நெறிமுறையின்படி பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கான தேர்வுகள் 21.06.2021 இல் தொடங்கி 30.07.2021 இல் முடிவுறும்.
* One word Question Exam - பணம் கட்டாமல் / தேர்வு எழுதாமல் உள்ள மாணவர்கள் தற்பொழுது தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக 24.05.2021 முதல் விண்ணப்பிக்கத் தொடங்கி 03.06.2021-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* மற்ற பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில் ஒன்றிரண்டு பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து மற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு 25.05.2021 முதல் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் தேர்வெழுதுவது கிராமப்புற மாணவர்களுக்குக் கடினமாக உள்ள சூழ்நிலையால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
* அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்த மற்ற அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கான பட்டத் தேர்வுகள், அரியர், இறுதித் தேர்வுகள் 15.06.2021 தொடங்கி 15.07.2021-க்குள் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் 30.07.2021-க்குள் வெளியிடப்படும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
29 days ago