கரோனா 2வது அலை; முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ஆசிரியை

By தாயு.செந்தில்குமார்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு பள்ளி ஆசிரியை ஒருவர் ரூ.1 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தப் பலரும், முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், பள்ளி ஆசிரியை ஒருவர் ரூ.1 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா, அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் பள்ளியில், ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் வசந்தா.

இவர் கரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.ஒரு லட்சம் தன்னுடைய சொந்த நிதியில் இருந்து வழங்கி உள்ளார். இந்த முன்னுதாரணச் செயலைச் சக ஆசிரியர், ஆசிரியைகளும், பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

ஆசிரியை வசந்தா, கடந்த பல ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் மட்டுமின்றி ஏழை எளியவர்கள், நாடோடிகள், மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாள்தோறும் 200 உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார். கரோனா முதல் அலையின்போது அவர், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்