கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000, இலவசக் கல்வி, ரேஷன்: மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனாவால் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதாமாதம் ரூ.5,000, இலவசக் கல்வி, ரேஷன் ஆகியவை வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றில் தட்டுப்பாடு நிலவுகிறது.

மத்தியப் பிரதேசத்திலும் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. நேற்று (மே.12) ஒரே நாளில் 8,970 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். 84 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரோனாவால் பெற்றோர்களை/ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டங்களை மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கரோனா பெருந்தொற்றில் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி வழங்கப்படும்.

அத்துடன் மாதாமாதம் ரூ.5,000 தொகையுடன் இலவச ரேஷனும் வழங்கப்படும். இத்தகைய குடும்பங்களில் இருந்து பணியாற்ற விரும்புவோருக்கு அரசு உத்தரவாதத்தின் கீழ் கடன்களும் வழங்க முடிவெடுத்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கோவிட் பரவலைக் கணக்கில் கொண்டு மத்தியப் பிரதேச அரசு, 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்