கர்நாடகாவில் கரோனா தீவிரமடைந்ததை அடுத்து 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் இன்றித் தேர்ச்சி செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், 10-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்தன.
கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தக் கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. நெருக்கடி காலத்தில் ஆன்லைனிலும் நேரடியாகவும் கல்வி போதிப்பதும், கற்பதும் பெரும் சவாலாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டும் கரோனா 2-வது அலை காரணமாகவும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றித் தேர்ச்சி அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்துக் கர்நாடகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''கரோனா தீவிரமடைந்ததை அடுத்து 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் இன்றித் தேர்ச்சி செய்யப்படுவர். கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, ஆசிரியர்கள் அனைவரும் இனி வீட்டில் இருந்தே பணியாற்றுவர்'' என்று தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்பு (இண்டர்) பொதுத் தேர்வுகள் திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
29 days ago