காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500 புத்தகங்களைக் கொண்டு எழுத்துகளைப் பிரம்மாண்டமாக வடிவமைத்து, உலக புத்தக நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்.23-ம் தேதி உலக புத்தக நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில். மாணவர்களின் அறிவு வளத்தை மேம்படுத்தவும், நல்ல சிந்தனைகளை வளர்க்கவும் புத்தகங்கள் துணைபுரிய வேண்டும் என்ற நோக்கில், பள்ளியின் நூலகர் த.ராஜலெட்சுமி ஏற்பாட்டில் உலக புத்தக தின விழா நடத்தப்பட்டது.
மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் கே.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். பள்ளியின் துணை முதல்வர் எம்.பாஸ்கர், காரைக்கால் நூலகர் சங்கத் தலைவர் செந்தில்வேலன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
புத்தக தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மைதானத்தில் 500 புத்தகங்களைக் கொண்டு பெரிய அளவில் ”உலக புத்தக தினம்” என்ற எழுத்து வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
20 hours ago
வெற்றிக் கொடி
20 hours ago
வெற்றிக் கொடி
20 hours ago
வெற்றிக் கொடி
20 hours ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago