தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

By செ.ஞானபிரகாஷ்

கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், சட்டம், கலை மற்றும் அறிவியல் உட்பட அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்தியப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் 90 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. அதில் மருத்துவம், பொறியியல், சட்டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இணைப்புக் கல்லூரிகளில் வரும் 19-ம் தேதி முதல் எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகள் தொடங்குவதாக இருந்தன. இந்நிலையில், இத்தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் லாசர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ''புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்புக் கல்லூரித் தேர்வுகள் தற்போதைய கரோனா சூழலால் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான நகல் அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்