தமிழகத்தைப் போன்று கரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் 75 சதவீதக் கல்விக் கட்டணத்தைப் புதுச்சேரியிலும் வசூலித்து, உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறைச் செயலருக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் உயர் அதிகாரிகள் கூட்டத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால், தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டே 75 சதவீதக் கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அறிவித்துச் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் முழு கல்விக் கட்டணத்தையும் கட்டக் கூறுகிறார்களே?
இது தொடர்பாக கல்வித்துறைச் செயலர் விசாரிப்பார். விரைவில் நடவடிக்கை எடுப்போம்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு எவ்வகையில் கல்வித்துறை உறுதுணையாக உள்ளது? மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு உணவு கிடைக்க உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து விளக்கமான செய்தி தரும். கல்வித்துறை சார்ந்த விஷயங்கள் அனைத்திலும் உரிய நடவடிக்கைகளை எடுப்போம்.
புதுச்சேரியில் ரேஷன் இல்லாத நிலையில் பயனாளிகளுக்கு அரிசிக்கான பணம் பல மாதங்களாக வரவில்லையே?
அரிசி வழங்குவதற்கான நிதியை விடுவித்துள்ளேன். (ஏன் வரவில்லை என்று தலைமைச் செயலரிடம் ஆளுநர் விசாரித்தார். அதிகாரிகளிடம் பேசி பதில் தருவதாக தலைமைச் செயலர் குறிப்பிட்டார்).
கரோனா காலத்தில் கல்விக் கட்டணத்தை முழுவதுமாகச் செலுத்தக் கூறுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா?
கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
கல்வித்துறை விவகாரங்கள் தொடர்பாக கல்வித்துறைச் செயலர் அசோக்குமாரிடம் கேட்டதற்கு, " மாணவர்களுக்கு வீடியோ பாடம், தமிழக அரசாணைப்படி புதுச்சேரியில் கரோனா காலத்தில் தனியார் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணம் நிர்ணயித்தல், மதிய உணவு இல்லாததால் குழந்தைகளுக்கு உணவை உறுதிப்படுத்துதல் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago