பிளஸ் 2 மொழிப் பாடத்தேர்வுத் தேதி மாற்றம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொழிப் பாடத்தேர்வு மே 31-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''2020-2021ஆம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்சமயம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 02.05.2021 அன்று நடைபெறுவதால், 03.05.2021 அன்று நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத் தேர்வு மட்டும் 31.05.2021 அன்று நடைபெறும்.

இதர தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடைபெறும். மேலும், தேர்வுகள் நடைபெறும்பொழுது பின்பற்ற வேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர் மத்தியில் எழுந்தது. தேர்வைத் தள்ளிவைப்பது தொடர்பாக, கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக ஒரு தேர்வு மட்டும் தள்ளி வைக்கப்படுவதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

15 hours ago

வெற்றிக் கொடி

15 hours ago

வெற்றிக் கொடி

15 hours ago

வெற்றிக் கொடி

15 hours ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்