பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கரிகால் சோழன் வரலாற்றைப் பாடமாக வைக்க வேண்டும் என்று துணைவேந்தரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாமன்னன் கரிகால் சோழனின் முழு வரலாற்றையும் பாடமாக வைக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் செல்வம், பதிவாளர் பேராசிரியர் முனைவர் கோபிநாத் ஆகியோரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்திருக்கிறார் கும்பகோணம் கரிகாலன் வரலாற்று ஆய்வு மைய நிறுவனரும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினருமான முனைவர் ஆதலையூர் சூரியகுமார்.
இதுகுறித்து ஆதலையூர் சூரியகுமார் கூறும்போது, ''கரிகால் சோழ மன்னன் உலக மன்னர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்தவன். போர்த் திறனும் நிர்வாகத் திறனும் மிக்கவனாக இருந்தவன். தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்தி சோழ தேசத்தின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டியவன். இமயமலைக்குச் சென்று புலிக்கொடியை நாட்டியதுடன் இலங்கையையும் வெற்றி கொண்டவன். இதனால் சோழ தேசத்தின் புகழ் உலக அளவில் பரவியது.
ஒருபுறம் தன்னுடைய வீரத்தாலும் விவேகத்தாலும் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தவன். இன்னொரு புறம் மக்கள் போற்றும் தலைவனாக ஆட்சி புரிந்தான். மக்களின் நலன் மேல் அக்கறை கொண்டு நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் பல்வேறு பணிகளை மேற்கொண்டான். கால்வாய்கள் வெட்டியது, நதிகளுக்குக் கரை அமைத்தது, குளங்கள் வெட்டியது போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்தினான்.
» பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா?- பள்ளிக் கல்வித்துறை அவசர ஆலோசனை
» கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கியது
தொழில்நுட்பம் என்ற ஒன்றே தொடங்காத காலத்தில் 'காவிரியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி கல்லணை கட்டியது' விவசாயிகளின் மீது கரிகாலன் கொண்டிருந்த அக்கறைக்கு அதிகபட்ச சாட்சியாக இருக்கிறது. இப்படிப்பட்ட மன்னனின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படிப்பது என்பது எதிர்காலத் தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மாணவர்கள் ஒரு வலிமை மிக்க தேசத்தைக் கட்டமைப்பதற்கான நிர்வாகத் திறனை கற்றுக் கொள்ள முடியும். அதனால்தான் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு கரிகாலனின் முழு வரலாற்றையும் பாடமாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறேன்'' என்று ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
15 hours ago
வெற்றிக் கொடி
15 hours ago
வெற்றிக் கொடி
15 hours ago
வெற்றிக் கொடி
15 hours ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago