புதுவை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய 'கொம்மாந்தர்' விருது

By செ.ஞானபிரகாஷ்

மொழிப்பெயர்ப்புப் பணிக்காகவும், பிரெஞ்சு மொழிக்காகவும் ஆற்றிய பணியைப் பாராட்டி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான கொம்மாந்தர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே 'செவாலியே', 'ஒஃபீசியே' ஆகிய விருதுகளைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த விருதினைப் பெற்றுள்ளார்.

புதுவைப் பல்கலைக்கழக பிரெஞ்சுத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்திக்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் மிகப் பெரிய விருதாகிய 'கொம்மாந்தர்' விருது கிடைத்துள்ளது. இந்த விருது பிரான்ஸ் நாட்டு தேசியக் கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழா பிரெஞ்சுத் தூதரகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த விருது கடந்த ஐம்பது ஆண்டுகளாக பிரெஞ்சு மொழிக்கும், மொழிபெயர்ப்புத் துறைக்கும் டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ஆற்றிய பணியைப் பாராட்டும் விதத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஏற்கெனவே செவாலியே, ஒஃபீசியே போன்ற பிரெஞ்சு அரசு விருதுகள் பெற்றிருக்கிறார். பரிசளிப்பு விழாவில் பிரெஞ்சு கான்சல் ஜென்ரல் லீஸ் தல்போ, பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்டி இவ்விருதைத் தந்துள்ளார்.

இதுபற்றி பிரெஞ்சுத் தூதரகத் தரப்பில் கூறுகையில், "பிரான்ஸில் கலை, கல்விப் பணி ஆற்றியவர்களுக்கு மூன்று முக்கிய விருதுகள் தரப்படுகின்றன. இதில் மூன்றாவதாக உள்ள 'செவாலியே' விருதும், அதற்கு அடுத்த உள்ள 'ஒஃபீசியே' விருதும் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்கெனவே தரப்பட்டுள்ளது. தற்போது கல்விப் பணிக்காக முக்கிய உயரிய விருதான 'கொம்மாந்தர்' விருதைத் தந்துள்ளனர்.

பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு 11 மொழிபெயர்ப்பு நூல்களும், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு 4 பொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிட்டிருக்கிறார். அவர் பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த 'முன் பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை' எனும் நூல் பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் ரோமண் ரோலன்ட் விருதினை 2019-ம் ஆண்டு பெற்றது. மொழிபெயர்ப்பு மட்டுமல்லாமல், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் ஏராளமான கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அதனால் இம்மூன்று விருதுகளையும் அவர் வென்றுள்ளார்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்