புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கத் துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், திருநள்ளாறு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஆர்.கமலக்கண்ணன் வலியுறுத்தி உள்ளார்.
திருநள்ளாறு பகுதியில் இன்று (மார்ச் 30) முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கடந்த 15 நாட்களாகப் புதுச்சேரி, காரைக்காலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுச்சேரியில் பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று பயில அனுமதிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறில் பள்ளி மாணவிகள் 2 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதாகத் தகவல் வந்துள்ளது.
எனவே மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், உடனடியாக அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் விடுமுறை அறிவிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களைக் கிருமிநாசினியால் தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
» நடமாடும் பள்ளி, நூலகம்: ஏழைக் குழந்தைகளுக்காக ஸ்கூட்டி மூலம் பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்
» தபால் வாக்குகள் முறையாகக் கையாளப்படுகிறதா?- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி
திருநள்ளாறில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றிபெறும். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு அமைவது உறுதி'' என்று முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago