புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 40 ஆயிரத்து 262 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 674 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கடந்த ஒன்றரை மாதங்களாக 50-க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த கரோனா தொற்று, கடந்த சில நாட்களாக 50-ஐத் தாண்டி வருகிறது. இதன் மூலம் கரோனாவின் தாக்கம் மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் புதிதாக 61 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இச்சூழ்நிலையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் மட்டுமே இயங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
» புதுவை அரசு மகளிர் கல்லூரியில் 4 பேராசிரியர்கள், ஒரு மாணவிக்குக் கரோனா; கல்லூரி மூடல்
» டான்செட் தேர்வு; அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்துக்கு சிறப்புப் பேருந்துகள்
இதனிடையே புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள சுப்பிரமணிய பாரதி அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் பணியாற்றிய வகுப்பறை மட்டும் மூடப்பட்டு, மாணவிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago