புதுவை அரசு மகளிர் கல்லூரியில் 4 பேராசிரியர்கள், ஒரு மாணவிக்குக் கரோனா; கல்லூரி மூடல் 

By அ.முன்னடியான்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 4 பேராசிரியர்கள், ஒரு மாணவிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மூடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 40 ஆயிரத்து 262 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 674 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கடந்த ஒன்றரை மாதங்களாக 50-க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த கரோனா தொற்று, கடந்த சில நாட்களாக 50-ஐத் தாண்டி வருகிறது. இதன் மூலம் கரோனாவின் தாக்கம் மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 4 பேராசிரியர்கள், ஒரு மாணவிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டு, வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி, ஒரு தேர்வு நடைபெற்ற நிலையில், கரோனா காரணமாகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், முதலாமாண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பின்னர் தெரிவிக்கப்படும் எனக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்