அரசுப் பள்ளிகளில் 1- 7ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. படிப்படியாக 10-ம் வகுப்பு வரை இந்தப் பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில், மாநிலப் பள்ளிக் கல்வித்துறை, அனைத்து அரசுப் பள்ளிகள், மண்டல் ப்ரஜா பரிஷத், ஜில்லா பரிஷத் பள்ளிகளில் உள்ள வகுப்புகளை ஆங்கில வழிக் கல்விக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாகக் கடந்த 2019-ல் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி 2020- 2021ஆம் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையும் 2021 - 2022 ஆம் கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
» 8-ம் வகுப்பு வரை ஆஃப்லைன் தேர்வுகள் இல்லை: டெல்லி அரசுப் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
» கரோனா விடுமுறையில் நாதஸ்வரம் கற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்: பரிசுத் தொகை வழங்கி பாராட்டிய அமைச்சர்
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 1- 7ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. படிப்படியாக 10-ம் வகுப்பு வரை இந்தப் பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2024-ம் ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்புகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலேயே இயங்கும். இதனால் தெலுங்கு ஒரு பாடமாக மட்டுமே இருக்கும். முழுப் பாடத்திட்டமும் ஆங்கிலம் அல்லது இந்தி வழிக் கல்வியாகவே இருக்கும்.
இதற்கிடையே அரசு, மாநிலக் கல்வித் திட்டத்தை முழுமையாக நீக்கிவிடுமா அல்லது அதற்கு இணையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துமா என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. எனினும் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில அரசு 2021 - 2022ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago