டிஆர்பி தேர்வில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வாய்ப்பு?- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

By செய்திப்பிரிவு

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் டிஆர்பி தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே பெரிய கொரவம் பாளையத்தில் அம்மா மினி கிளினிக் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை இன்று திறக்கப்பட்டன. இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பள்ளி மாணவர்களுக்கு முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்துத் தற்போது எதுவும் கூற முடியாது.

உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்களைத் தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் டிஆர்பி தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்களின் கோரிக்கைகளை ஆலோசித்து, 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுத் தேதி முடிவு செய்யப்படும். முதல்வரின் ஒப்புதல் பெற்று, தேர்வுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்