ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர்வதற்குத் தகுதியான பள்ளி மாணவர்கள், பிப்.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''சென்னை மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 26 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இவ்விடுதிகளில் சேர விரும்பும் எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி மாணவர்கள், அவரவர் பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளின் காப்பாளரிடமிருந்து விடுதி சேர்க்கை விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பூர்த்தி செய்து, பள்ளி மாணவர்கள் விண்ணப்பத்தில் பள்ளித் தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வரிடமும் சான்றொப்பம் பெற வேண்டும்.
» ஈரோடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 12-வது நாளாகப் போராட்டம்
» பொதுத்தேர்வு விவரங்களைப் பதிவு செய்ய பள்ளிகளுக்குக் கூடுதல் அவகாசம்: தேர்வுத் துறை அறிவிப்பு
மேலும், உரிய ஆவணங்களுடன் பள்ளி மாணவர்கள் பிப்.18-ம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் பிப்.19-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, 044- 2522 5657 என்ற எண்ணை அணுகலாம்''.
இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago