தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரிகளிலும் இன்று முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்தனர்.
கரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு இணைய வழியிலேயே வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஊரடங்கு தளர்வை அடுத்து முதல்கட்டமாகக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிச.8-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதற்கிடையே தற்போது கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளும் பிப்.8 முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்லைப் படிப்புகளில் முதல் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் முதுகலைப் படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 2-ம், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
10 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு வந்தனர்.
இதற்கிடையே கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago