சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 55-வது நாளாக இன்று ஒற்றைக் காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே தங்கள் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தித் தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர் உணவு என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் தடை செய்துள்ளது. இருந்தபோதிலும் மாணவர்கள் போராட்டக் களத்திலேயே உணவருந்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் எனப் பல்வேறு தரப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
» மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பணிகளுக்கு நேர்காணல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் தமிழக அரசு, உயர் கல்வி நிர்வாகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைச் சுகாதாரத் துறை நிர்வாகத்துக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது. ஆனாலும், மாணவர்கள் கல்விக் கட்டணத்தைப் பற்றி அரசு ஆணை வரும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (பிப்.1) காலை 11.30 மணிக்கு 55-வது நாள் போராட்டமாக ஒற்றைக் காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்தும் முழங்கங்கள் எழுப்பினர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago