இரு முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த இரண்டு முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க், எம்.எஸ்சி, எம்பிஏ உள்ளிட்ட முதுகலைப் பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் எம்.டெக். பிரிவில் 17 வகையான துறைகளில் பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மத்திய அரசின் நிதி உதவியுடன் எம்.டெக். உயிரித் தொழில்நுட்பவியல் (bio technology) மற்றும் கணக்கீட்டு உயிரியல் (computational biology) துறைகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் 50 சதவீத இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மத்திய அரசுக்கு 50% இடங்களை வழங்க முடியாது எனத் தமிழக அரசு அறிவித்து, வழக்கமான 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும் எனத் தெரிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எம்.டெக். உயிரித் தொழில்நுட்பவியல் மற்றும் கணக்கீட்டு உயிரியல் ஆகிய இரண்டு முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான நடப்பு ஆண்டு (2020- 2021) மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்