சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று காலி வாளிகளுடன் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதுநிலை மாணவர் மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைத் தங்கள் கல்லூரியில் வசூலிக்கக் கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தித் தொடர்ந்து 46 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பல்கலைக்கழக நிர்வாகம், விடுதியில் உணவு, மின்சாரம், குடிநீர் வழங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் இன்று மாணவர்கள் விடுதி வாயிலில் வாளியுடன் அமர்ந்து குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
» பழநி அருகே ஆசிரியைக்கு கரோனா தொற்று: அரசு உயர்நிலைப் பள்ளி மறுதேதி குறிப்பிடாமல் மூடல்
» 9, 11-ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை திட்டம்
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் வெளியில் இருந்து உணவு எடுத்து வருவதையும் கல்லூரி நிர்வாகம் தடுத்தது. இதனை ஏன் தடுக்கிறீர்கள் என்று மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது முதுநிலை மாணவர் அசாருதீன் என்பவர் திடீரென மயக்கம் போட்டுக் கீழே விழுந்தார். அவரை சக மருத்துவ மாணவர்கள் மீட்டுச் சென்று போராட்டக் களத்தில் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனால் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago