2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜன.23) கடைசித் தேதி ஆகும்.
நாடு முழுவதுள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் (மெயின்) தேர்வு, ஜேஇஇ பிரதானத் (அட்வான்ஸ்டு) தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான முதல்கட்ட ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 23 முதல் 26-ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது
இதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜனவரி 23) கடைசித் தேதி ஆகும். இதற்கான விண்ணப்பக் கட்டணத்தை நாளை (ஜன.24) மாலைக்குள் செலுத்த வேண்டும். ஜேஇஇ தேர்வுக்கான அனுமதிச் சீட்டு பிப்ரவரி 2-வது வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: jeemain.nta.nic.in
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago