குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்: ராமநாதபுரம் எஸ்.பி தகவல்

By கி.தனபாலன்

சிறு வயதில் இருந்தே குழந்தைகள் மத்தியில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்தார்.

கலை இலக்கிய ஆர்வலர் சங்கம், பாரதி புத்தகாலயம் மற்றும் அருணா ஸ்டோர் இணைந்து நடத்தும் 4-வது ராமநாதபுரம் புத்தகத் திருவிழா ஜன.22 முதல் பிப். 4 வரை ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது.

காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக பங்கேற்கலாம். இங்கு 9 அரங்குகளில் 50 பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஓவியக் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.

மேலும் குறைந்த கட்டணத்தில் சிறுதானிய உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் விழாவில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புத்தகத் திருவிழாவை இன்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கலை இலக்கிய ஆர்வலர் சங்க தலைவர் மருத்துவர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். வர்த்தக சங்க தலைவர் பா.ஜெகதீசன், செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலை இலக்கிய ஆர்வலர் சங்க செயலாளர் மருத்துவர் வான்தமிழ் இளம்பரிதி வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் முதல் விற்பனையை துவக்கி வைக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் கோ.முத்துச்சாமி, நகராட்சி ஆணையர் என்.விஸ்வநாதன் உள்ளிட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புத்தக அரங்குகளை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வந்த பிறகு வெகுவாகக் குறைந்து வருகிறது. எ

ட்டு வினாடிகளுக்கு மேல் ஒரு விஷயத்தை தொடர்ந்து கவனம் செலுத்த முடியாத சூழல் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் தற்போது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும்.

மாதம் ஒரு புத்தகமாவது படிக்கும் வகையில் குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். ஏராளமான புத்தகங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மக்கள் ஒரு நாள் முழுவதையும் இந்த புத்தக கண்காட்சியில் செலவிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்று பயன்பெற வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்