அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு, நவம்பர்/ டிசம்பர் 2020 செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, அவற்றுக்கான மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் நவம்பர்/ டிசம்பர் 2020 செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன. இதற்கிடையே சில செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. அதற்கான மாற்றுத் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அண்ணா பல்கலைக்கழககம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பொறியியல் கல்வி பயிலும் மாணவா்களுக்காக செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் வரும் பிப்.6 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற இருந்தன.

அன்றைய தினத்தில் பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் தேர்வு நடைபெற உள்ளது. இதனால் பிப்.6-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு பிப்.16-ம் தேதியும், பிப்.13-ம் தேதி நடத்தப்பட இருந்த தேர்வு பிப்.17-ம் தேதியும் நடத்தப்படும். இதுகுறித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்