பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் நாளை (13-ம் தேதி) முதல் 16-ம் தேதி வரை பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறையைப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளி வகுப்புகள் கடந்த 4-ம் தேதி முதல் சோதனை முறையில் நடந்து வருகின்றன. ஏற்கெனவே பொதுத்தேர்வு எழுத உள்ளோருக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பொங்கலையொட்டி புதுச்சேரி கல்வித்துறையானது நாளை முதல் 16-ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. முன்னதாக, 13-ம் தேதி போகி பண்டிகையும், 15-ம் தேதி மாட்டுப் பொங்கலும், காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, புதுவை அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் 4 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.
இக்காலங்களில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளும், ஆன்லைன் வகுப்புகளும் நடக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காலையில் மட்டும் பள்ளி இயங்குகிறது. பொங்கலுக்குப் பிறகு வரும் 18-ம் தேதி முதல் முழு நேரமும் வகுப்புகள் இயங்குமா என்பது தொடர்பான அறிவிப்பு பிறகு வெளியிடப்படும் என்று பள்ளிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
29 days ago