மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான கேட் 2021 தேர்வின் ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
கேட் நுழைவுத்தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும். இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி பாம்பே நடத்துகிறது.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2021-22ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5, 6, 7, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மார்ச் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
» சிஏ தேர்வுகள் 2021: ஹால் டிக்கெட் வெளியீடு
» மதுரை எய்ம்ஸின் மத்திய அரசுப் பிரதிநிதியாக ஐஐடி சென்னை இயக்குநர் நியமனம்
இந்நிலையில் கேட் 2021 தேர்வின் ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தித் தேர்வர்கள், தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் https://gate.iitb.ac.in/mock.php என்ற இணைய முகவரியில், மாதிரி கேட் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
கூடுதல் விவரங்களுக்கு: gate.iitb.ac.in
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago