கால்நடை உதவி மருத்துவர் தேர்வுத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கால்நடை உதவி மருத்துவர் காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 1,141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதியன்று நடைபெற்றது.

தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு 1,907 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 04.01.2021 முதல் 08.01.2021 வரை, 11.01.2021, 12.01.2021, 18.01.2021 முதல் 23.01.2021 வரை, 25.01.2021, 27.01.2021 முதல் 29.01.2021 வரை நேர்காணல் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 4-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தைப்பூச தினத்தை (28.01.2021) பொது விடுமுறையாக, அரசு அண்மையில் அறிவித்த நிலையில், 28-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு, 29.01.2021 மற்றும் 30.01.2021 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பான அழைப்பாணை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒதுக்கப்பட்ட நாளில் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளாத தேர்வர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்