கரோனா காலத்தில் ஆசிரியர்கள் கற்பித்தலில் மேற்கொண்ட புதுமைகள் என்ன என்பது குறித்துப் பள்ளிகள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா காரணமாகக் கடந்த 9.5 மாதங்களாக டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத் தளர்வுகளை ஒட்டி 2020 அக்டோபர் மாதத்தில் சில மாநிலங்களிலும் 2021 ஜனவரி மாதத்தில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. எனினும் கரோனா தடுப்பூசி வரும் வரை பள்ளிகளைத் திறக்க மாட்டோம் என்று டெல்லி அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால் கற்பித்தல் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கரோனா காலத்தில் ஆசிரியர்கள் கற்பித்தலில் மேற்கொண்ட புதுமைகள் என்ன என்பது குறித்துப் பள்ளிகள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுபற்றி டெல்லி கல்வி இயக்குநரகம் அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ’’ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் கோவிட் 19 மேலாண்மைப் பணிகளிலும் புதுமையான கற்பித்தலிலும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். அவர்கள் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டியது அவ்சியம்.
டெல்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழந்தைகளுக்காக புதிய இதழைத் தொடங்க உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்களுக்கும் மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
அதேபோல் கற்பித்தலில் மேற்கொண்ட புதுமைகள் குறித்து ஆசிரியர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி வரை விவரங்களை ஆணையத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் இதுகுறித்த தகவல்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
29 days ago