ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: ஜன.10 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

எம்டி ஓமியோபதி படிப்புக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவில் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

3 ஆண்டு கால முதுகலைப் படிப்பான எம்டி ஓமியோபதிக்கான விண்ணப்பங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்குத் தேர்வர்கள் AIAPGET - 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகும். ஜனவரி 10 முதல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தவுடன் அதைப் பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை, அரும்பாக்கம், சென்னை – 600 106 என்ற முகவரிக்கு ஜனவரி 30ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்