இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் பணி: 10, 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு 10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் தேசிய நோய்த் தொற்று அறிவியல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பணிகள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான தேர்வர்கள் Project Data Entry Operator, Semi-Skilled Worker, Project Junior Nurse, Project Research Assistant, Technician & Technical Assistant உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

28 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்குத் தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவின் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் பணி நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி 18 முதல் 21 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, புகைப்படங்கள், சான்றிதழ்களுடன் தேர்வுக்கு வரவேண்டும்.

அசல் கல்வி/ தகுதிச் சான்றிதழ்களுடன் வருபவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: http://nie.gov.in/images/careers/No._NIE-PE-Advt-Dec-2020_-17_159.pdf

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்