பழனியில் புதிய பல்கலைக்கழகம்?- அமைச்சர் அன்பழகன் பேட்டி

By செய்திப்பிரிவு

பழனியைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகர் கோயிலில் அமைச்சர் அன்பழகன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். ரோப் கார் மூலம் பழனி மலைக்கு அவரின் குடும்பத்தினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை ஒருங்கிணைத்துத்தான் புதிய பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட வேண்டும். பழனியைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து, விரைவில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கல்லூரிகள் 3 இயங்கி வருகின்றன. அவற்றில் ஒன்று பாலிடெக்னிக் கல்லூரி. மற்ற இரண்டும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள். அதுசம்பந்தமான முன்மொழிவுகள் எதுவும் வரப்பெறவில்லை. எனினும் கோயிலுக்குச் சொந்தமான கல்லூரியில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்