ஐஐஎம் கேட் தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில் சேர கேட் எனப்படும் பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான கேட் தேர்வு, நாடு முழுவதும் நவ.29ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வு 159 நகரங்களில் 430 தேர்வு மையங்களில் 3 ஷிஃப்டுகளில் நடைபெற்றது. கேட் தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதினர். கரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு 96.15 சதவீதத் தேர்வர்களுக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியலை இன்று ஐஐடி இந்தூர் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஐஐடி இந்தூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பாட நிபுணர் குழு மேற்கொண்ட கவனமான ஆய்வில் முதல் மற்றும் மூன்றாவது ஷிஃப்டு கேள்வித்தாள்களுக்கான விடைகளில் எந்த மாற்றமும் இல்லை. எனினும் இரண்டாவது ஷிஃப்ட்டில் ஒரு கேள்விக்கான விடை மாற்றப்பட்டுள்ளது.
https://iimcat.ac.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் பட்டியலைக் காணலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐஎம் கேட் தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியல் வெளியானதை அடுத்து, ஜனவரி முதல் வாரத்தில் கேட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago