எம்.பில். மருத்துவ உளவியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

எம்.பில். மருத்துவ உளவியல் படிப்புக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் 2020-2021ஆம் ஆண்டுக்கான மருத்துவ உளவியல் பாடப்பிரிவில் ஆய்வியல் நிறைஞா் படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரும் ஜனவரி 12ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு ஆண்டு காலம் கற்பிக்கப்படும் இப்படிப்புக்கான தகுதி, விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட விவரங்கள் https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N20122740.pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.

முதுகலை மருத்துவப் படிப்பு முடித்த தகுதியுடைய மாணவர்கள், விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட வேண்டிய இதர ஆவணங்களை செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், 162, ஈ.வெ.ரா. பெரியாார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 என்று முகவரிக்கு ஜனவரி 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஜனவரி 8ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் நடைபெற உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://tnhealth.tn.gov.in/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்