குரூப்-1 தேர்வுக்கான நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் ஆட்சிப் பணிகளில் ஒன்றான குரூப்-1 தேர்வு 2020ஆம் ஆண்டு ஏப்.5-ம் தேதி நடக்கவிருந்தது. விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 2020 பிப்ரவரி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி காலை நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள், https://www.tnpsc.gov.in/, https://tnpscexams.in/ ஆகிய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தேர்வர்கள் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். அப்போது மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

மேலும்