பஞ்சாப்பில் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 1.3 லட்சம் ஸ்மார்ட்போன்கள் வழங்கல்

By பிடிஐ

பஞ்சாப் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்புக்காக இதுவரை 1.3 லட்சம் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள் 1,75,443 பேருக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது. முதல் கட்டமாக அப்போதே 50 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் 80 ஆயிரம் பேருக்கானா ஸ்மார்ட்போன்களை, பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் நேற்று (டிச.18) மாலை வழங்கினார். மீதமுள்ள மாணவர்களுக்கும் விரைவில் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறும்போது, ''கரோனாவால் 2020- 21 ஆம் கல்வியாண்டு பாதிப்பைச் சந்தித்துள்ளது. தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களில் டச் ஸ்கிரீன், கேமரா, அரசு செயலிகள், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான இ-பாடங்கள் ஆகியவை இருக்கும்.

பெருந்தொற்றுக் காலத்தில் கல்வியை அணுகுவதில் உள்ள சிரமத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2017-ல் ஆட்சிக்கு வரும் முன் காங்கிரஸ், பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்புத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்