முதுகலை மருத்துவப் படிப்பு: இனி-செட் 2021 கலந்தாய்வுத் தேதிகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான 'இனி-செட் 2021' கலந்தாய்வுத் தேதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர் உள்ளிட்ட 11 கல்லூரிகளில், 2021-ல் முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு இந்த ஆண்டில் இருந்து தனி நுழைவுத் தேர்வு (இனி - செட்) நடத்தப்படுகிறது.

முதுகலை மருத்துவப் படிப்புகளான எம்.எஸ்., எம்டி., எம்.எச்., டி.எம்., எம்.சிஎச்., எம்.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்காக இனி செட் தேர்வு நாடு முழுவதும் நவ.20 ஆம் தேதி நடைபெற்றது.

இதற்கான முடிவுகள் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகின. இந்நிலையில் 'இனி-செட் 2021' கலந்தாய்வுத் தேதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தக் கலந்தாய்வு மாதிரிக் கலந்தாய்வுடன் சேர்த்து 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைக் குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வெண்டும்.

இதன்படி முதல்கட்டக் கலந்தாய்வுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும். முதல்கட்டக் கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட இடம் குறித்த ஒப்புதலை டிச.23 முதல் 26-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

இரண்டாம் கட்டக் கலந்தாய்வுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவஒரி 4-ம் தேதி வெளியாகும். முதல்கட்டக் கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட இடம் குறித்த ஒப்புதலை ஜனவரி 5 முதல் 8-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: aiimsexams.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 hours ago

வெற்றிக் கொடி

3 hours ago

வெற்றிக் கொடி

3 hours ago

வெற்றிக் கொடி

3 hours ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

மேலும்