சைனிக் பள்ளிகளில் சேரலாம்: விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை (டிச.18) கடைசித் தேதி ஆகும்.

நாடு முழுவதும் 23 மாநிலங்கள்‌ மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடைபெறும். இத்தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும்.

இந்நிலையில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜன.10-ம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பப் பதிவு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே தேர்வு பிப்.7-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் டிச.18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

எனவே, இந்தத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://aissee.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள நாளை கடைசித் தேதி ஆகும்.

மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0120 6895200 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டோ அல்லது aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொண்டோ விளக்கம் பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்