ஜன.3-ல் குரூப் 1 தேர்வு; 2021-க்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2021 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிக்கைப்படி குரூப்-1 பணிகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஜனவரி 3-ம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொறியியல் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பாணை ஏப்ரல் மாதம் வெளியாகிறது. குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை மே மாதம் வெளியாக உள்ளது. விஏஓ கிராம நிர்வாக அதிகாரிக்கான தேர்வுக்கும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பாணை செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

தமிழக அரசின் ஆட்சிப் பணியில் ஒன்றான குரூப்-1 தேர்வு 2020 ஆம் ஆண்டு ஏப்.5-ம் தேதி நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்காக விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 2020 பிப்ரவரி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் குரூப்-1 முதல் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது.

கரோனா தொற்றுக் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், புதிய காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்துத் தேர்வு நடைபெறுமா, தேர்வர்களுக்கான வயது வரம்பு குறைக்கப்படுமா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையைக் காண:

https://www.tnpsc.gov.in/static_pdf/annualplanner/2021_ARP_Planner_16_12_2020.pdf

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்