கரோனா நோய்த்தொற்றால் 9 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. மழையிலும் ஆர்வமுடன் இளைஞர்கள் கல்லூரிக்கு வந்தனர்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் 24-ம் தேதி முதல் புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. 9 மாத இடைவெளிக்குப் பிறகு ஊரடங்கு தளர்வால் மருத்துவக் கல்லூரிகளை டிசம்பர் 1-ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
அடுத்தகட்டமாக இன்று முதல் அனைத்துக் கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பிற்கான இறுதியாண்டு வகுப்புகளைத் தொடங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று இரவு தொடக்கிய மழைப் பொழிவு இன்றும் புதுச்சேரியில் நீடித்தது. அதே நேரத்தில் 9 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறப்பால் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்தனர்
» பொறியியல் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 4 அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே இடம்
இதுகுறித்து உயர் கல்வித்துறையினர் கூறுகையில், "மாணவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடக்க வேண்டும், 50 சதவீத மாணவர்கள் மட்டுமே ஒரு நேரத்தில் கல்லூரியில் இருக்கும்படி கல்லூரி நிர்வாகம் வருகையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பன போன்ற வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago