ஜேஇஇ மெயின் 2021 தேர்வு தேதிகளை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதன்படி முதல்கட்டமாக பிப்ரவரி மாதம் 22 முதல் 25 ஆம் தேதி வரை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.
இதற்காக மாணவர்கள் jeemain.nta.nic.in.என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் இந்தி, ஆங்கில, உருது ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், பிற மொழிகளில் தேர்வுகள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே நடைபெறும்.
அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 329 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
கரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு, தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago