தமிழகத்தில் உள்ள 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசுப் பள்ளிகளின் எணிக்கை 37,431. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகள் 3,054. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 3,054. அவற்றில் மேல்நிலைப் பள்ளிகள் 1,218.
இந்நிலையில் இப்பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் குறித்துக் கணக்கெடுக்கும் பணி அண்மையில் நடைபெற்று முடிந்தது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படது.
ஆய்வின் முடிவில் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதையடுத்து 2,391 பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை உருவாக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளிகளின் இட வசதி, சுற்றுப்பிற கிராமங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைப் பெற்று அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவரங்களை jdssed@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
25 days ago
வெற்றிக் கொடி
25 days ago
வெற்றிக் கொடி
25 days ago