யுஜிசி நெட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியீடு; ஆட்சேபிக்க இன்று கடைசித் தேதி

By செய்திப்பிரிவு

யுஜிசி நெட் தேர்வின் 5 பாடங்களுக்கான விடைக் குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றில் பிழைகள் இருந்தால் ஆட்சேபிக்க இன்று கடைசித் தேதி ஆகும்.

ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது. கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இத்தேர்வு உள்ளது.

இதற்கிடையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு தொடர்ந்து 2 முறை தள்ளி வைக்கப்பட்டுக் கடந்த நவம்பர் மாதம் 19, 21, 26 மற்று 30-ம் தேதிகளில் நடைபெற்றது.

இதற்கிடையே தேர்வுகள் நடைபெற்ற வாழ்வியல் அறிவியல், கணிதம் மற்றும் வேதியியல் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான விடைக் குறிப்புகள் என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தேர்வர்கள் https://csirnet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் விடைக்குறிப்புகளைப் பார்த்து, தங்களின் விடையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவற்றில் பிழைகள் இருந்தால் ஆட்சேபிக்கஉரிய ஆதாரங்களுடன் ரூ.1000 கட்டணம் செலுத்தி, இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். இதற்கு இன்றே கடைசித் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE