மாணவர்கள் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரியர் தேர்வுள் நடைபெற உள்ளன. அதன்படி, நவம்பர்- டிசம்பர் மாதப் பருவத் தேர்வில் தங்களின் அரியர் தாளையும் எழுத விருப்பம் உள்ள மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லூரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதைத் தொடர்ந்து கல்லூரிகள், அரியா் தேர்வு எழுத உள்ள மாணவா்களின் விவரங்களை டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது அரியர் தேர்வு குறித்து அவசர அறிவிப்பு என்பதால், காலம் தாழ்த்தக் கூடாது.
» நாடு முழுவதும் நெடுஞ்சாலை திட்டங்களில் பொறியியல் மாணவர்களை பங்கேற்க வைக்க புதிய திட்டம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கரோனா பரவலை அடுத்து தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களுக்கும், தமிழக அரசு தேர்ச்சி வழங்கியது. இதற்கு, ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரியர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago