நிவர் எதிரொலி: யோகா, இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

நிவர் எதிரொலியாக யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நிவர் அதி தீவிரப் புயலாக மாறி இன்றிரவு (நவ.25) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும். அப்போது அதிகபட்சமாக 155 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் கடந்த பின்னரும் அதன் பாதிப்பு 6 மணி நேரத்திற்கு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வரும் சூழலில், ரயில், பேருந்து போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 27 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. நீட் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படும் இப்படிப்புகளுக்காக சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நிவர் புயலால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்