சிஏ தேர்வுகள் இன்று தொடக்கம்: 1,085 மையங்களில் நடக்கிறது

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கணக்குத் தணிக்கையாளர் எனப்படும் சிஏ தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இதற்கான தேர்வுகள் நேரடியாக 1,085 தேர்வு மையங்களில் நடைபெறுகின்றன.

இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, கோவிட்-19 பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு பிஹார் தேர்தல் காரணமாக மீண்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் இன்று (நவம்பர் 21) முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை தேர்வு மையங்களில் நடைபெறுகின்றன. சிஏ அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெற உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நவ.1-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தேர்வுகள் அனைத்தும் இன்று ஒரே ஷிஃப்ட்டில் மதியம் 2 மணிக்குத் தொடங்குகின்றன. நாடு முழுவதும் 1,085 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. கரோனா தொற்றுப் பரவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு செய்துள்ளது.

இந்தியாவில் சிஏ படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், இந்த துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்