10, 11, 12 ஆம் வகுப்புத் தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் (நவ.17) அசல் மதிப்பெண் சான்றிதழை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
நிரந்தரப் பதிவெண் கொண்டு தேர்வெழுதிய 10-ம் வகுப்புத் தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வு எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாகத் தேர்ச்சி பெறாதவர்களுக்கு தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
நிரந்தரப் பதிவெண் இல்லாமல் எழுதிய தேர்வர்கள் தற்போது எழுதி இருப்பின், தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
11, 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வர்களில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பிளஸ் 1 (600 மதிப்பெண்), பிளஸ் 2 (600 மதிப்பெண்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக வழங்கப்படும். 11, 12 ஆம் வகுப்புகளில் முழுமையாகத் தேர்ச்சி அடையாதவர்களுக்கு, இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களைப் பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும்.
» சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பே பொதுத் தேர்வுகள்?- தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்
மேற்கண்ட தேர்வர்கள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago