11, 12-ம் வகுப்புத் துணைத் தேர்வு விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய மற்றும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 18.11.2020 (புதன்கிழமை) முற்பகல் காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று Notification பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் –II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் Notification பக்கத்தில் Application for Retotaling / Revaluation என்ற தலைப்பினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 19.11.2020 (வியாழக்கிழமை) காலை 10.00 மணி முதல் 20.11.2020 (வெள்ளிக் கிழமை) மாலை 5.00 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
» கோவை அரசு கலைக் கல்லூரிக்கு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பதவியேற்பு
» மருத்துவக் கலந்தாய்வு 17-ம் தேதி தொடக்கம்?- தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்
மறுமதிப்பீடு
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/-
மறுகூட்டல்
உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-
ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago